ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மத்திய அரசு விமானத்தில் இருந்து கீழே விழுவதற்கு பாராசூட் கொடுக்காமல் கீழே விழுந்த பின்பு மாவு கட்டுப்போடும் வேலையைச் செய்து வருவதாகவும். ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும், சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படும் என்று அவர்களுக்கு தெரியும். தெரிந்தும், அதை மனதில் வைத்து தொழில் நிறுவனங்கள் நிதியாண்டில் கட்டி வந்த ஜி.எஸ்.டி வரியில் 25 சதவீதத்தை கொடுத்து அவர்களை மத்திய அரசு காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை.