தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலம்பாட்ட போட்டி: 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு! - ஒற்றைக்கம்பு

ராமநாதபுரம்: பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் கழகம் நடத்திய சிலம்பாட்ட போட்டியில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

silambam-competition-the-participation-of-more-than-400-playerssilambam-competition-the-participation-of-more-than-400-players
silambam-competition-the-participation-of-more-than-400-players

By

Published : Feb 8, 2021, 6:37 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நேற்று (பிப்.07) நடைபெற்றது.

இப்போட்டியினை பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகர் தொடங்கிவைத்தார். இதில் ஒற்றைக்கம்பு, குழுபோட்டி, சண்டையிடுதல் போன்ற பிரிவுகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சிலம்பாட்ட போட்டி

முன்னதாக போட்டியை தொடங்கிவைத்த பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகர் சிலம்பம் விளையாடி போட்டியைத் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிலம்பம் கழக பொறுப்பாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 8 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் திறக்கப்பட்ட 3 அரங்குகள்!

ABOUT THE AUTHOR

...view details