தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரமக்குடி வணிக நிறுவனங்களில் ஆய்வு! - வணிக நிறுவனங்களில் ஆய்வு

ராமநாதபுரம்: பரமக்குடியில் 3 ஆயிரம் ச.அடிக்கு மேல் அளவுடன் இயங்கிய கடைகளில் அலுவலர்கள் ஆய்வு செய்து எச்சரித்தனர்.

பரமக்குடி வணிக நிறுவனங்களில் ஆய்வு
பரமக்குடி வணிக நிறுவனங்களில் ஆய்வு

By

Published : May 1, 2021, 7:33 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்கும் விதமாக, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகங்கள் செயல்படக்கூடாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்களில் வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் அளவு கொண்ட கடைகளை மூடக் கோரி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அவை செயல்படும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இதையும் படிங்க:ஏமன் நாட்டிற்குச் சென்ற இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details