தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நக்சல் சண்டையில் வீரமரணம்- தஞ்சை கணேசனுக்கு சௌரிய சக்ரா விருது! - Savurya Sakra Award

நக்சல் சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் தஞ்சாவூர் கணேசனுக்கு சௌரிய சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. இதனை அவரது மனைவி பெற்றுகொண்டார்.

நக்சல் சண்டையில் உயிர்நீத்த வீரருக்கு சவுர்ய சக்ரா விருது
நக்சல் சண்டையில் உயிர்நீத்த வீரருக்கு சவுர்ய சக்ரா விருது

By

Published : Aug 12, 2021, 6:31 PM IST

ராமநாதபுரம்:நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில், நக்சல், பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அப்போது, நக்சல்களுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த தஞ்சை கணேசனுக்கு சௌரிய சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை தஞ்சாவூர் கணேசன் மனைவி பெற்றுகொண்டார்.

உயிர்நீத்த ராணுவ வீரர் கணேசனின் மனைவி

ஐஎன்எஸ் பருந்து விமான தளத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தலைமை கேப்டன் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

தஞ்சாவூர் கணேசன் 2006ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: 'இமாச்சல் நிலச்சரிவில் 13 பேர் மீட்பு...'

ABOUT THE AUTHOR

...view details