தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: லாரி ஓட்டுநர் மீது பாய்ந்த போக்சோ - Ramnad Sexual harassment news

ராமநாதபுரம்: பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

By

Published : Mar 18, 2021, 3:14 PM IST

ராமநாதபுரம், கமுதி அருகே இடைச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுபதி (28). இவர் கமுதி பகுதியில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் கமுதி கோட்டை மேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாயார் பஞ்சவர்ணம் கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். பிரசன்னா உத்தரவின்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சேதுபதியை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:'சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார்... உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல்!'

ABOUT THE AUTHOR

...view details