ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனிப்பிரிவு காவலராக சரவணன் என்பவர் பணியாற்றிவந்தார். இவர் கடந்த 2018 ஜனவரி 23 ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது தொடர்பாக 2018 பிப்ரவரி 4 ஆம் தேதி இராமேஸ்வரம் மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவலர்கள் சரவணனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 22 மாதங்களாக நடைபெற்றுவந்தது.