தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவு நீர்: கடல் வாழ் உயிரினங்களுக்கு அபாயம்! - கடலில் கலக்கும் கழிவு நீர்

ராமநாதபுரம்: கீழக்கரை கடலில் கழிவுநீர் கலக்குவதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாக சிபிஐ (எம்எல்) கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sewage water mixing in keelakarai
Sewage water mixing in keelakarai

By

Published : Jun 13, 2021, 1:41 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் சேரக்கூடிய ஒட்டுமொத்த கழிவுநீரும், கீழக்கரை லைட் ஹவுஸ் பகுதி கடற்கரை வழியாக கடலில் கலக்கிறது.

எந்தவித சுத்திகரிப்பும் செய்யாமல் கழிவுநீர் ஒட்டுமொத்தமாக நேரடியாக கடலில் கலப்பதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதோடு, கடலில் நீர் மாசுபாடும் ஏற்படுகிறது.

இந்நிலையில், கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவு நீரை கடலில் சேராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிபிஐ (எம்எல்) கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details