கமுதி அருகே அய்யனார்குளம் பகுதியில் காவல் சார்பு ஆய்வாளர் ஜான், தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில், ஏழு பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது! - latest news
இராமநாதபுரம்: கமுதி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது
இதனைக் கண்ட காவல்துறையினர் ஏழு பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்துரூ. 30 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கமுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன், பூமிநாதன், பாண்டி, முருகன், கருப்பையா, சிவ வேல்முருகன், முருகன் ஆகியோர் என்பது தெரியவந்தது.