ராமநாதபுரம்:திருவாடானை அருகே உள்ள முள்ளிமுனை ஊராட்சியை சேர்ந்த ராமர் (35) மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
கடந்த 13 வருடங்களுக்கு மேலாக சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் திரும்பி, குடும்பத்துடன் சிறிது காலம் இருந்து, மீண்டு கடல் தொழில் செய்ய செல்வது வழக்கம்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்கு வந்த இவர், கரோனா காரணமாக, ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி அன்று ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி மாலத்தீவு சென்று, அங்கு 15 நாள்கள் தங்கி, பின் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று சவுதி சென்றதாக, மனைவி கலை நிவேதியா மற்றும் குடும்பத்தினரிடம் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி கடலுக்கு சென்ற அவர் 4 ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் மட்டும் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. அங்குள்ள உறவினர்கள் முலம் உடல் சொந்த ஊர் வந்துவிடும் என்று எண்ணி ஒரு மாதம் கடந்து நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.