தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல்! - Sti Lanka

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்துள்ள உச்சிப்புளியில் இலங்கைக்கு கடத்த இருந்த 1 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய இருவர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல்

By

Published : Jun 15, 2021, 7:30 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள உச்சபுளியில் சந்தேகத்திற்கிடமாக அதிக மூட்டைகளுடன் ராமேஸ்வரம் நோக்கி சரக்கு வாகனம் சென்றுள்ளது.

இரவு ரோந்து பணியிலிருந்த குற்றப்பிரிவு தடுப்பு காவல் துறையினர், இதனை பின்தொடர்ந்து உச்சிப்புளி அருகே வாலாந்தரவை டோல்கேட் பகுதியில் வாகனத்தை மடக்கி விசாரணை செய்தனர்.

1,200 கிலோ மஞ்சள் பறிமுதல்

அந்த வாகனத்தை சோதனை செய்ததில் 24 மூட்டைகளில் 1,200 கிலோ மஞ்சள் இருந்துள்ளது.
காவல் துறை அலுவலர்களை கண்டதும் இருவர் வாகனத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய நபர்கள் குறித்து உச்சிப்புளி காால் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உச்சிப்புளி காவல் துறை

இது குறித்து உச்சிப்புளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்திவந்த வாகனத்தில் மஞ்சள் மூட்டைகள், அதிகமாக இருந்த காரணத்தால் ராமநாதபுரம் மாவட்ட கோட்டாட்சியரிடம் உச்சிப்புளி காவல் துறையினர் ஒப்படைக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த மஞ்சள் மூட்டைகளை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details