தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்! - 600 kilogram turmeric powder seize

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ சமையல் மஞ்சளை தனிப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ramnad
ramnad

By

Published : Jul 22, 2020, 12:28 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகின் மூலம் கடத்த முயன்ற சுமார் 600 கிலோ சமயல் மஞ்சள் பார்சல்களை மண்டபம் தனிப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

வேதாள பகுதியைச் சேர்ந்த முபாரக், பாம்பன் பகுதியைச் சேர்ந்த பாபு உசேன் என்பது விசாரணையில் தெரியவந்தது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் பொடி இலங்கைக்கு கடத்த முயன்றது காவலர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இதில், 15 மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நேற்று (ஜூலை 21) இலங்கையிலிருந்து சந்தேக படகில் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த ஒருவரை காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நான்கு சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்த இந்தியர்கள்

ABOUT THE AUTHOR

...view details