தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 2ஆம் நிலை காவலர் பணிக்கான தேர்வு: எஸ்.பி. ஆய்வு - Second grade police exam

ராமநாதபுரம்: இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் ராமநாதபுரத்தில் உள்ள 13 மையங்களில் 15 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வுசெய்தார்.

police exam
police exam

By

Published : Dec 13, 2020, 1:34 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச. 13) ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் ஆறாயிரத்து 249 பேரும், கீழக்கரை தேர்வு மையங்களில் ஐந்தாயிரத்து 260 பேரும், பரமக்குடி தேர்வு மையங்களில் நான்காயிரம் பேர் என 13 மையங்களில் மொத்தமாக 15 ஆயிரத்து 509 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு எழுத வரும் அனைவரும் அழைப்பு கடிதத்தை சரிசெய்த பின், கட்டாயம் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு பணிகளை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

இதையும் படிங்க: பூத்தது பூ ஒன்று: சேலத்தில் இரவில் மலர்ந்த அரியவகை பூ!

ABOUT THE AUTHOR

...view details