ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறிய கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது. அதன்படி, மூன்று மீட்டர் இடைவெளி அல்லாமல் வியாபாரம் செய்த இரண்டு மளிகைக் கடைகள், முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த ஒரு மருந்தகத்திற்கு வட்டாட்சியர் முருகேசன், துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் முன்னிலையில் செயல் அலுவலர் மாலதி சீல் வைத்தார்.
கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத கடைகளுக்குச் சீல் - curfew india
ராமநாதபுரம்: கரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத மருந்தகம், மளிகைக் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
ramanathapuram
இதையடுத்து அவர் பேசுகையில், “சம்பந்தப்பட்ட மளிகைக் கடைகளும், மருந்தகமும் பலமுறை எச்சரித்தும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவில்லை, அதன் காரணமாக சீல் வைக்கப்பட்டன. பேருந்து நிலையத்தில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்வோர் ஏற்கனவே பேரூராட்சியில் உரிமம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். புதிதாக யாரும் கடைகள் போட்டு விற்பனை செய்யக் கூடாது. அனுமதிக்கப்பட்ட கடைகளில் விலைப் பட்டியல் கட்டாயமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா அச்சம்: விழுப்புரத்தில் 3 வார்டுகளுக்கு சீல்