ராமநாதபுரம்:மாவட்டம் முழுவதிலும் நேற்று (அக்.16) சூறைக்காற்று வீசியதில், பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
மேலும் வழக்கத்தைவிட மன்னார் வளைகுடா, லட்சத்தீவு கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.