தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இராமநாதபுரத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்! - Sea cucumber seized worth Rs 1 crore

இராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள 3.5 டன் எடைகொண்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடல் அட்டைகள் பறிமுதல்!
கடல் அட்டைகள் பறிமுதல்

By

Published : Nov 3, 2020, 9:11 PM IST

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளையிலிருந்து இலங்கைக்கு, டன் கணக்கில் கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தெற்கு பள்ளிவாசல் தெரு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த ஆம்னி வேனை சோதனையிட்டனர். அதில், பச்சை கடல் அட்டைகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனே அவற்றை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட, கடல் அட்டைகள் சுமார் 3.5 டன் எடையும், ரூ. 1 கோடி மதிப்பும் உள்ளது. மேலும் வானத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை நடந்துவருகிறது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டை, மஞ்சள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details