தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் கடல் அட்டை பறிமுதல் ! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

மண்டபம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த தடை செய்யப்பட்ட ஒன்றை டன் கடல் அட்டையை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

sea-cucumber-seized-in-ramanadhapuram
sea-cucumber-seized-in-ramanadhapuram

By

Published : Sep 19, 2021, 6:51 PM IST

ராமநாதபுரம் : மண்டபம் கடல் பகுதியான மனோலியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒரு நாட்டு படகு நிற்பதாக கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் சந்தேகத்திற்கிடமாக நின்ற படகினை சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்துவதற்காக ஒன்றரை டன் கடல் அட்டை வைத்திருந்தது தெரியவந்தது.

ஒன்றை டன் கடல் அட்டை பறிமுதல்

இதையடுத்து கடலோர காவல் படையினர் கடல அட்டை, படகு இரண்டையும் பறிமுதல் செய்து வனத்துறை அலுவலர் வெங்கடேஷிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர், வனத்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : காதல் விபரீதம்: 10 மணி நேரம் கிணற்றில் தத்தளித்த இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details