ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மண்டபம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டை, போதைப் பொருள்கள் கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்கும்விதமாக கடலோரக் காவல்படை, இந்திய கடற்படை, மெரைன், வனத் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி, இன்று (ஜூலை 13) காலையில் மண்டபம் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் குறவன் தோப்புப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது நீலநிறம் வல்லம் ஆழ்கடலை நோக்கிச் செல்வதைக் கண்டு அதனைத் துரத்திச் சென்றனர். வனத் துறையினர் ரோந்துப் படகில் வருவதை அடுத்து கடத்தல்காரர்கள் தப்பித்து ஓட நினைத்து வல்லத்தை இயக்கியுள்ளனர்.
மடக்கிப்பிடித்த வனத் துறை