தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற மூன்று டன் கடல் அட்டைகள் பறிமுதல் - இரமாநாதபுரத்தில் கடல் அட்டை கடத்தல்

ரமாநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற மூன்று டன் கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து செய்துள்ளனர்.

Sea Card

By

Published : Oct 13, 2019, 8:38 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவது வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. புகாரின் பேரில் வனத்துறை அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் வனத்துறை அலுவலர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றகொண்டிருந்த நாட்டுப்படகை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் கடல் அட்டைகள்

அதில் 261 மூட்டைகளில் 3,200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. கடல் அட்டைகள் பறிமுதல் செய்த வனத்துறை அலுவர்கள், கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், வேதாளை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது(31), கருப்பையா (45) என்பது தெரியவந்தது.

3 டன் கடல் அட்டை பறிமுதல்

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கடத்தலின் போது பிடிப்பட்ட கடல் அட்டைகளை ஒப்பிடுகையில் இதுதான் அதிக எடை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details