தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

96 போல் 86 - பள்ளி கால பசுமை நினைவுகள் சந்திப்பு - Ramnad Kannirajapuram

ராமநாதபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1985-86ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்கள் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்வு நேற்று (ஆக. 16) நடைபெற்றது.

96' படத்தைப்போல 86' பள்ளிகால பசுமை நினைவுகள் சந்திப்பு
96' படத்தைப்போல 86' பள்ளிகால பசுமை நினைவுகள் சந்திப்பு

By

Published : Aug 17, 2021, 8:43 AM IST

ராமநாதபுரம்: கன்னிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1985-86ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்வு கன்னிராஜபுரத்தில் நேற்று (ஆக. 16) நடைபெற்றது.

1985-86ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களில் ஒருவர் மதுரை அரசு இராசாசி அரசு மருத்துவமனை இஜிசி ஆபரேட்டராக உள்ள வில்சன் புஷ்பராகம். அவர் தனது நண்பர்களை சந்திக்க நினைத்து இந்த ஏற்பாட்டை செய்தார்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு..

அவர் பழைய மாணவர்கள் அனைவரின் தொலைபேசி எண்களைத் தேடிக் கண்டறிந்து பள்ளிப்பருவ நண்பர்கள், மீண்டும் சந்திக்கும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

இவர்களில் பலர் வணிகர்களாகவும், ஆசிரியர்களாகவும் உள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் சாம்நியூபிகின் நண்பர்களை உற்சாகப்படுத்த இரு தங்கக் காசுகளும், இரு வெள்ளிக் காசுகளும் பரிசாக வழங்கினார்.

96' படத்தைப்போல 86' பள்ளிகால பசுமை நினைவுகள் சந்திப்பு

இது குலுக்கல் முறையில் நான்கு பேருக்கு வழங்கப்பட்டது. தங்கக் காசுகள் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, பார்வதிக்கும், வெள்ளிக் காசுகள் சக்திவேல், தமிழரசிக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தர்மராஜ், கார்மேகம், ஜெர்மினியான்ஸ், தாமஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

சென்னை, மதுரை போன்ற பல ஊர்களிலிருந்து வந்தவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பள்ளிப் பருவ நண்பர்களை உணர்ச்சிப் பெருக்கோடு சந்தித்துப்பேசி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: 'தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை..!'

ABOUT THE AUTHOR

...view details