ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் வி. ரோகித். உத்திரபிரதேசத்தில் நடந்த தேசிய தடகளப்போட்டியில் கலந்து கொண்டு, முதலிடத்தில் வந்து சாதனை படைத்துள்ளார்.
உத்திரபிரதேசத்தில் தேசிய அளவிலான ஆல் இந்தியா யூத் கேம்ஸ் நேசனல் சேம்பியன் ஷிப் தடகள விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 19 முதல் 21 ஆம் தேதி வரை நடந்தது.
இந்த போட்டிகளில் இந்தியாவின 20 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து 5 மாவட்டங்கள் சார்பில், 20 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில்,14 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், பரமக்குடி ஹரிஸ்வர்மா ஆங்கில மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் வி.ரோகித் முதல் இடத்தை வென்று தமிழ்நாட்டிற்கும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சாதனை படைத்த மாணவரை பள்ளியின் பொருளாளர் கல்பனா தேவி, முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன், நிர்வாக அலுவலர் சந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் ஆசிரியர்,ஆசிரியைகள், அலுவலர்கள் ஆகியோர் பாராட்டினர்.
இதையும் படிங்க:ஒரு ரூபாய் டியூஷன்! திருச்சியில் ஒரு ரியல் 'மாஸ்டர்'