ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள காமராஜ்புரத்தைச் சேர்ந்தவர் முருகேஷன். இவரது மூன்றாவது மகன் மகேந்திரன்(13) சிக்கல் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் சாலை விபத்தில் பலி! - School boy killed
ராமநாதபுரம்: பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய மாணவன் லாரி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மகேந்திரன் நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்தப்பின் வீட்டிற்கு திரும்புள்ளார். அப்போது பேருந்து நிலையம் அருகே லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்துத் தொடர்பாக காவல்துறையினர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய மாணவன் லாரி விபத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.