தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று (ஆக. 17) முதல் பள்ளிகளில் ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் : 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் இன்று (ஆக.17) முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 500 தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிலும் புதிதாக வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு புத்தகங்களுடன் புத்தகப் பையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வள்ளல் பாரி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர்வேணி கூறுகையில், "தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும் பள்ளிக்கு சேர்க்கைக்கு வரும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கிருமிநாசினிகள் வழங்கியும் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு புத்தகங்கள் உடனடியாக வழங்கப்படுகின்றன" என்று கூறினார்.