ராமநாதபுரம்: வாலாந்தரவை அருகே தெற்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரமேஸ்வரன், உமாவதி தம்பதி. இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இதனால், தம்பதியை ஊரை விட்டு கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.
ஊருக்குள் செல்ல வேண்டும் என்றால் 30 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று தம்பதியிடம் கூறியுள்ளனர். வேறு வழியில்லாமல், பணம் கொடுத்த பின்பும் தம்பதியை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.
கிராம மக்கள் கொடுமை
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளைக் கூறி தம்பதியை கிராம மக்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர். உமாவதிக்கு சொந்தமான 38️ சென்ட் நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் சிலர் முள்வேலி, கம்பி கொண்டு அடைத்தும் வைத்துள்ளனர்.