இராமநாதபுரம்:சாயல்குடி அருகே இடத்தகராறில் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர் அருகே கடந்த 2018 ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து சாயல்குடி வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், சாயல்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்த நிலையில், சாயல்குடி காவல் நிலைய சரகம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை மகன் முத்து என்பவர் காணாமல் போனதாக, அவரது அண்ணன் அழகுலிங்கம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஏற்கனவே விசாரணை நடத்திவந்தனர்.
இந்த இரு வழக்குகளையும் விசாரணை செய்ததில், காணாமல்போன முத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. முத்துவை கொலை செய்த குற்றவாளிகள் யார் என்று தெரியாமல் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்திவந்தனர்.
கீழக்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திருமலை மேற்பார்வையில், சிக்கல் காவல் ஆய்வாளர் முருகதாசன், சார்பு ஆய்வாளர் சரவணன், தலைமைக்காவலர் தங்கச்சாமி, தீவிர குற்றத்தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து, மூன்று மாதங்களில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட முத்து தன்னுடைய குடும்பச் சொத்தில் பாகமாக கிடைத்த 20 சென்ட் சொத்தினை, அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்ற குணம் என்பவருக்கு விற்பதாக ஒப்பந்தம் செய்து ரூ.50 ஆயிரம் முன்பணமாகப் பெற்றுக் கொண்டார்.