ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேற்று (மார்ச்.28) சசிகலா வருகை தந்தார். திருவாடானை அமமுக சட்டப்பேரவை வேட்பாளர் ஆனந்த், ராமநாதபுரம் சட்டப்பேரவை வேட்பாளர் ஜி.முனியசாமி ஆகியோர் மாவட்ட எல்லைக்கே சென்று சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
அதன் பின்னர் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதிக்குச் சென்ற சசிகலாவுக்கு அமமுகவினர் குருத்தோலை வழங்கி வரவேற்றனர். பின்பு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு திருப்புல்லாணி அமமுக தொண்டர்களுடன் இணைந்து, பெருமாள் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து தரிசித்தார்.