தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்! - ஊரக வளர்ச்சி துறை

ராமநாதபுரம்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Rural Development Department officials protest demanding nine demands!
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Aug 26, 2020, 7:15 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக இன்று (ஆக.26) உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது.

அப்போது, கரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல் வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும் என்றும் பழிவாங்கும் நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்ட கோவை மாவட்ட 4 ஊழியர்கள் மாவட்ட மாறுதல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், முன்னாள் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை குறித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள 17பி குற்றச்சாட்டுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் பதவி உயர்வு ஆணைகளை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது முக்கிய அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் , மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் இரண்டாம் நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details