ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கரு. மாணிக்கம் நேற்று (மே15) தொண்டி ஆரம்பச் சுகாதர நிலையம், திருவாடனை அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாததால் ஒரு உள்நோயாளிகள் கூட மருத்துவமனையில் இல்லை. கரோனா சம்பந்தமாக வேக் சினேசன், ஸ்கிரீனிங் செய்யப்படுகிறதா என்று கேட்டதற்கு மருத்துவர்கள் அதற்கான வசதிகள் இல்லை என்று பதில் கூறினார். இது குறித்து உரிய ஏற்பாடுகள் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ். மங்கலம் தாலுகா வட்டார மருத்துவமனையை ஆய்வு செய்தார். மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலர் சுகந்திபோஸ் என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக இதே இடத்தில் இருந்து வருவதாகவும் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளையும், அங்கு பணிபுரியும் செவிலியர், ஊழியர்களையும் மரியாதை குறைவாக நடத்துவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.