தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்! - ராமநாதபுரம் செய்திகள்

கமுதி அருகே பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரைக் கண்டித்து  சாலை மறியல்
காவல்துறையினரைக் கண்டித்து சாலை மறியல்

By

Published : Jan 15, 2021, 10:00 PM IST

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சின்ன உடப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சங்கிலி, உதயகுமார். இரு வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சங்கிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சங்கிலி மீது மண்டல மாணிக்கம் காவல்துறையினர் பொய்வழக்கு பதிந்துள்ளதாக கூறி நூறு பெண்கள் உட்பட சுமார் 300 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கமுதி - திருச்சுழி சாலையில் மரங்களைப் போட்டு நடைபெற்ற இந்த சாலை மறியலில், பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details