சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி ராமநாதபுரம் சரக காவல் துணை தலைவர் முகாம் அலுவலகத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு வார பேரணி - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு - சாலை விபத்துகள்
ராமநாதபுரம்: சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சாலை பாதுகாப்பு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
![சாலை பாதுகாப்பு வார பேரணி - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு சாலை பாதுகாப்பு வார பேரணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5775347-305-5775347-1579520561628.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டில் சாலை உயிரிழப்புகளை குறைப்பதில் மாநில அளவில் 5ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1403 ஓட்டுநர் உரிமங்கள் மாவட்ட காவல்துறையின் பரிந்துரையின்பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அதி வேகத்தில் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் ராமநாதபுரம் விபத்தில்லா மாவட்டமாக உருவாவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.