ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி பரமக்குடி அருகே பொட்டிதட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராமநாதபுரம் சாலை விபத்துக்களில் 3 பேர் பலி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடந்த சாலை விபத்துக்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்து
இதேபோல், பரமக்குடி அருகே முத்துச் செல்லாபுரம் என்ற இடத்தில் குமாரசாமி என்ற முதியவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை ஒத்தக்கடை சேர்ந்த லியோ ஜெய்சிங் என்பவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து, குமாரசாமி மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த இரண்டு சாலை விபத்துக்களில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.