ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுந்தரபுரத்தில் உள்ள குடோனில் ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைப்பதாக உணவு கட்டுப்பாட்டுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அலுவலர்கள் அந்தக் குடோனை ஆய்வு செய்தனர். அங்கு ரசாயனம் மூலம் (எத்திப்பான் ஸ்பிரே) 3 ஆயிரம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.