ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்த முருகேசன் என்பவர், கடந்த 10 நாள்களுக்கு முன் பணி நிறைவு பெற்றார். இதனையடுத்து அவருக்குக் கிடைத்த ஓய்வு பணத்தில், சுமார் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமூக இடைவெளியுடன் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினார்.
ராமேஸ்வரம் தீவில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் பல்வேறு அடிப்படைத் தேவையான பொருள்களை வழங்கி வரும் நிலையில், மின்சார வாரியத்தில் பணியாற்றியவர், தனக்குக் கிடைத்த ஓய்வுப் பணத்தில் உணவுப் பொருட்கள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.