நேற்று ராமேஸ்வரத்திலிருந்து கடலூருக்குச் சென்று படகு வாங்கிவிட்டு திரும்பும் வழியில் தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 10 மீனவர்கள் சென்ற நிலையில் 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அதன்பிறகு மாயமான 8 மீனவர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. இதில் விமானம்,ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
மாயமான எட்டு மீனவர்களில் நான்கு மீனவர்கள் உயிருடன் மீட்பு!
ராமேஸ்வரம் : படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 8 மீனவர்களைத் தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்றது. தற்போது அதில் நான்கு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மல்லிப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
மாயமான மீனவர்களில் தற்போது நான்கு மீனவர்கள் மல்லிப்பட்டினம் கடலோர காவல் படையினர், மீனவர்கள் மூலம் உயிருடன் மீட்கப்பட்டனர். கப்பல் படையினர் அவர்களுக்கு உதவி சிகிச்சை அளித்து மல்லிப்பட்டினம் கொண்டு வந்தனர். மீனவர் முனீஸ்வரன், தரக்குடியான், ரஞ்சித்குமார், முனியசாமி ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும்,இவர்கள் நான்கு பேரும் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்குச் சிகிச்சை கொண்டு சென்றனர். இந்நிலையில் மாயமான மீனவர்கள் உயிருடன் இருப்பதாக சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
TAGGED:
news_tnj