ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டினர். இம்மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 910 உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று முன்தினம் வரை 4 ஆயிரத்து 725 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் கிராம பஞ்சாயத் தலைவர் பதவிக்காக 1,479 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 2,713 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினருக்காக 479 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 41 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.