ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியானது நேற்று அண்ணா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணும் பணி தொடங்கிய முதலே திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி முன்னிலை வகித்தார்.
சுற்றுகள் மாற மாற நவாஸ் கனிக்கும், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இடையே வாக்கு வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இறுதிச் சுற்று முடிவுகள் இரவு 12 மணிக்கு மேலே அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணி நடைபெற்று மூன்று மணிக்கு பிறகே ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 122 வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றிப் பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
அதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீரராகவ ராவிடம் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து அவரின் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உற்சாகத்தில் வளாகத்தின் முன்பாக கோஷமிட்டு பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மொத்தம் பதிவான வாக்குகள் - 10,66,146 வாக்குகள்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி - நவாஸ் கனி - 4, 69,943