ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி தாலுகாவிற்குட்பட்டு சத்திரக்குடி மின்வாரிய அலுவலகம் உள்ளது.12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ள இந்த அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ரவி என்பவருக்கு கீழ் பல ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சத்திரக்குடி அருகே சேமனூரை சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மின்பாதை ஆய்வாளராக இங்கு பணியாற்றி வருகிறார்.
பணியிடத்தில் பெண்ணிடம் அத்துமீறும் மின் ஊழியர்; வைரலாகும் வீடியோ! - மின் வாரிய ஊழியர்
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே சத்திரகுடி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் பெண்ணிடம் அத்துமீறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல் அங்கு துப்புரவு பணியாளராக அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் பணிசெய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகராஜ் துப்புரவு பணியாளரை வலுகட்டாயமாக கையை பிடிப்பதும், கட்டிபிடிப்பதும் போன்று தவறாக நடந்துகொள்ளும் ஒரு நிமிட வீடியோவை சக பணியாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த ஒரு நிமிட வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே பெண்ணிகளிடம் ஆண்கள் அத்துமீறி நடக்கும் விவகாரங்கள் பரவலாக வெடித்துவரும் நிலையில், தற்போது இதுபோன்ற வீடியோ வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.