இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் வேன் ஓட்டுநர் வாகனத்திலிருந்த தமிழ்நாடு அரசின் பழைய கல்வியாண்டு புத்தகங்களைக் குப்பை போலத் தூக்கி வீசும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது.
பாட புத்தங்கங்களைக் குப்பை போல் எறியும் ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ - பாட புத்தங்கங்களைக் குப்பை போல் எரியும் ஓட்டுநர்
ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசின் புத்தகங்களை குப்பை போல் தூக்கி எறியும் ஓட்டுநரின் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து மண்டபம் பகுதி வட்டார கல்வி அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக மண்டபம் பகுதி வட்டார கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் கூறியதாவது:
"தமிழ்நாடு அரசின் பழைய பதிப்பு புத்தகத்தை உச்சிப்புளியில் இருந்து மண்டபம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்க எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் வாகன ஓட்டுநர் பழைய புத்தகம் என மிகவும் அலட்சியமாகத் தூக்கி வீசியுள்ளார். இதைப் பொதுமக்களில் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி அப்போது அங்கு பணியிலிருந்த இரு அலுவலக உதவியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தோம்” என்றார். இந்நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.