தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் கேளிக்கை விடுதியை மூடக்கோரி கிராம மக்கள் நூதனப் போராட்டம்! - Private lodge accommodation

ராமநாதபுரம் மண்டபத்தில் செயல்படும் தனியார் கேளிக்கை விடுதியை நிரந்தரமாக மூடக்கோரி கடல் தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் மீனவ கிராம மக்கள் காதில் பூச்சூடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் நுதான போராட்டம்
கிராம மக்கள் நுதான போராட்டம்

By

Published : Jan 5, 2021, 7:45 AM IST

Updated : Jan 5, 2021, 8:01 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தோணித்துறை தோப்புக்காடு பகுதியில் அரசின் உரிய அனுமதி பெறாமல் தனியார் கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இதனைக் கண்டிக்கும் விதமாக கடல் தொழிலாளர் சங்கத்தினர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் காதில் பூவை சுற்றியவாறு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காதில் பூச்சூடி போராட்டத்தில் ஈடுபட்டோர்

இப்போராட்டமானது சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட கடல் தொழிலாளர் சங்க செயலாளர் கருணாமூர்த்தி மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

அப்போது, “தனியார் கேளிக்கை விடுதியை அகற்றும் வரை போராட்டம் ஓயாது” என்று மீனவ கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு: 446 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!

Last Updated : Jan 5, 2021, 8:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details