ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் 27 வயதான பெண் செவிலி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம் சீல்வைக்கப்பட்டது. செவிலி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
இவர், சுகாதாரப் பணியாளர்களுக்கென இயக்கப்படும் சிறப்பு அரசுப் பேருந்து மூலமாக ராமநாதபுரத்திலிருந்து உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுவந்துள்ள நிலையில், பேருந்தில் பயணம்செய்த மருத்துவர்கள்,செவிலியர் உள்பட அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் மேற்கொண்டுவருகின்றன.