தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெச். ராஜா முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமான காங்கிரஸ் முக்கிய பிரமுகர் - congress leader joins bjp

ராமநாதபுரம்: காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் குட்லக் ராஜேந்திரன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

பாஜக
பாஜக

By

Published : Jun 26, 2020, 7:47 PM IST

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், திருவாடனை முன்னாள் ஒன்றிய தலைவருமான குட்லக் ராஜேந்திரன் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

திருவாடானையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய ஹெச். ராஜா, “தற்போது வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பிற நாடுகளை விட இந்தியா முன்னிலை வகிக்கிறது. நமது எல்லையில் சீன நாட்டினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த அருகதையும் இல்லை. சீனா தயாரித்ததிலேயே கரோனா வைரஸ் மட்டும்தான் தரமாக உள்ளது. அதுவும் இந்தியாவில் பலிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details