தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோரை கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - ராமநாதபுரம் நீதிமன்றம்

ராமநாதபுரம்: பெற்றோரை விஷம் வைத்துக் கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

arrest

By

Published : Aug 3, 2019, 10:13 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே வழிமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவர் திருமணமான பின் தனது மனைவியுடன் மும்பைக்குச் சென்று கடை வைத்து தொழில் செய்துள்ளார். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்படவே அவர் மீண்டும் தனது கிராமத்திற்கு குடும்பத்துடன் திரும்பி வந்துள்ளார். அதன்பின்னர் ராமச்சந்திரனின் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

இதில் மனவேதனை அடைந்த ராமச்சந்திரன், தனது தந்தை நடராஜன், தாய் கருப்பாயியிடம் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அவர்களை கொலை செய்யும் நோக்கில் 1.3.2018 அன்றிரவு வீட்டில் பழைய சோற்றில் பூச்சி மருந்து விஷத்தை கலந்து வைத்தார். அடுத்த நாள் காலை அந்த பழைய சோற்றை சாப்பிட்டு வயலுக்குச் சென்ற தாய் கருப்பாயி, தந்தை நடராஜன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து முருகேசனின் தம்பியான குமார், பார்த்திபனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் ராமச்சந்திரன்தான் விஷம் வைத்து தாய், தந்தையை கொலை செய்தார் என கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று நடந்த இறுதி விசாரணையில் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முக சுந்தரம், தாய் தந்தையை கொலை செய்த ராமச்சந்திரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 4,000 அபராதமும் விதித்தார். மேலும், அபராதம் கட்டத்தவறினால் இன்னும் 6 மாதம் கூடுதல் சிறை தண்டனை என தீர்ப்பளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details