தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் கோயிலில் தூய்மைப் பணியாளர்கள் காலியிடம்! - rameswaram temple

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தூய்மைப் பணியாற்ற 130 காலியிடங்களுக்கு தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளி வரவேற்கப்படுகிறது.

ராமேஸ்வரம் கோயிலில் தூய்மை பணியாளர்கள் காலியிடம்
ராமேஸ்வரம் கோயிலில் தூய்மை பணியாளர்கள் காலியிடம்

By

Published : Jul 6, 2021, 3:24 PM IST

ராமநாதபுரம்: தூய்மைப் பணிகளிலுள்ள காலியிடங்களுக்குத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் அம்பாள் சன்னதிகள் ஒன்று முதல் மூன்றாம் பிரகாரங்கள், புனித தீர்த்தக் கிணறுகளுக்குச் செல்லும் பாதைகள், நந்தவனப் பகுதி, அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ள 130 பணியாளர்கள் தேவைப்படுகின்றன.

இதற்கு முன் அனுபவம், தகுதியும் வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து, இரண்டு உறைகளுடன் முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி வரவேற்கப்படுகிறது.

ஒப்பந்தப்புள்ளி அளிக்க விரும்புவோர்

ஒப்பந்தப்புள்ளி அளிக்க விரும்புவோர் ராமேஸ்வரம் ஒப்பந்ததாரர் தகுதிச்சான்றாக இணைக்கப்பட வேண்டியவை:

  • நிறுவனத்தின் பதிவு சான்று.
  • ரூ.3 லட்சத்துக்கான வங்கி வரைவோலை.
  • திருக்கோயில், அரசு நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய முன் அனுபவச் சான்று.
  • மூன்று நிதியாண்டுகளில் சுகாதாரப்பணிகள் செய்து, மூன்று கோடி வருவாய் ஈட்டிய நிறுவனம் என்பதற்கான பட்டயக்கணக்கர் சான்று.
  • வருமான வரி செலுத்தியதற்கான சான்று உள்ளிட்டவைகளை இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

மேலும் இது குறித்த விவரங்களை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்திலும், www.tnhrce.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பேருந்தை இயக்கி சேவையை தொடங்கிய அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details