தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்! - Rameswaram Fishermen's Association Emergency Consultative Meeting

ஐந்து தீர்மானங்களை முன்னிறுத்தி வருகின்ற 21ஆம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ராமேஸ்வரத்தில் மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Rameswaram Fishermen's Association
Rameswaram Fishermen's Association

By

Published : Dec 18, 2020, 5:27 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் மீனவ சங்கத்தினர் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப் படகுகள் மீனவ சங்க கூட்டம் சங்க செயலாளர் சேசுராஜா தலைமையில் நடைபெற்றது. அதில், பல்வேறு மீனவ சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், “இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 36 பேரையும், அவர்கள் கொண்டு சென்ற ஐந்து விசைப் படகுகளையும் மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இருநாட்டு மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசுகள் பரஸ்பரம் பேசி ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்கள்.

மேலும், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 150 படகுகள் இலங்கையில் சேதம் அடைந்து விட்டன. அந்தப் படகிற்கான இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும், புரெவி புயலில் போது பாதிக்கப்பட்ட விசைப்படகில் உரிமையாளருக்கு தகுந்த இழப்பீடு தொகை வழங்க வேண்டும். உள்ளிட்ட ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

இத்தீர்மானங்களை முன்னிறுத்தி வருகின்ற 21ஆம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தடையை மீறி எருது கட்டு திருவிழா... காவல்துறை வழக்குப் பதிவு

ABOUT THE AUTHOR

...view details