தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75 நாள்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

75 நாள்களுக்கு பிறகு 600க்கும் மேற்பட்ட படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Ramanadhapuram
Ramanadhapuram

By

Published : Jun 30, 2021, 1:15 PM IST

ராமநாதபுரம் : தமிழ்நாடு முழுவதும் 61 நாள் மீன்பிடி தடை காலம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி முடிவடைந்தது.

மீனவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படாததாலும், விசைப்படகுகள் பழுது பணி முழுமை அடையாததாலும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி மீன்பிடிக்க செல்வதாக ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.


அதனடிப்படையில் இன்று 75 நாள்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 630 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details