தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டீசல் விலை உயர்வு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமநாதபுரம்: டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

rameswaram-fishermen-on-strike
rameswaram-fishermen-on-strike

By

Published : Jul 20, 2020, 3:52 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை20) துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.

அதற்கு ராஜிவ் காந்தி விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினர். இலங்கை அகதிகளை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது அப்படி ஈடுபடுத்தும் மீனவர்களுக்கு தொழில் செய்ய தடைவிதிக்கப்படும்.

அந்தக் கூட்டத்தில் டீசல் விலை ஏற்றத்தால் நிரந்தரமாக மீனவர்கள் தொழில் செய்ய முடியவில்லை எனவே அதனைக் கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் இதுகுறித்து மீனவர்கள், "மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் விற்பனை செய்ய வேண்டும். வழக்கமான பகுதிகளில் மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீன் வளத்துறை 5,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்திவிடுகிறது.

அதனை தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் பரிசீலனை செய்து எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும். மீனவர்கள் தங்குதடையின்றி மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

மேலும் வரும் 27ஆம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக டீசல் உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சுருக்குமடி வலை பயன்பாடு எதிர்த்து 32 கிராம மீனவர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details