தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்த ராமேஸ்வரம் மீனவர்கள்! - Minister D. Jayakumar

ராமநாதபுரம்: கடல் அரிப்பைத் தடுக்கும் விதமாக தடுப்பு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என ராமேஸ்வரம் மீனவ சங்க பிரதிநிதிகள் மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்த ராமேஸ்வரம் மீனவர்கள்
மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்த ராமேஸ்வரம் மீனவர்கள்

By

Published : Dec 27, 2020, 6:53 PM IST

ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மணிகண்டன் தலைமையில், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை சந்தித்து இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இரண்டு கோரிக்கைகள்:

ராமேஸ்வரம் ஓலைக்குடா, சங்குமால்-சுடுகாட்டான்பட்டி பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவதோடு, வீடுகளுக்குள் கடல் தண்ணீர் வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கடல் அரிப்பைத் தடுக்கும் விதமாக ஒரு தடுப்பு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

தங்கச்சிமடத்தில் இயற்கை சீற்றத்தால் படகுகள் சேதமடையாமல் இருக்க வடக்கு கடற்கரையில் ஒரு தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

இந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் விரைந்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

இதையும் படிங்க:வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details