மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசியதால், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆறு நாள்களுக்குப் பிறகு மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்! - Ramewshwaram Firshermen
ராமநாதபுரம்: கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் ஆறு நாள்கள் இடைவெளிக்குப் பின்பு இன்று மீண்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதனால் தனுஷ்கோடி, பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம், ஏர்வாடி, மூக்கையூர், தேவிப்பட்டிணம், தொண்டி உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களிலிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில், ராமநாதபுரம் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் ராமேஸ்வரம், பனைக்குளம், தொண்டி, மண்டபம், தேவிப்பட்டிணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து மீனவர்கள் இன்று மீன்வளத் துறையின் அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் பாம்பன், ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.