ராமநாதபுரம்: இலங்கையிலுள்ள கடற்பகுதிகளில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் விடுதலைசெய்ய வலியுறுத்தி கடந்த 13ஆம் தேதி மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு திரும்பினர்.
ஆனால், தங்கச்சிமடம் ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற மெசியா, சாம்சன் டார்வின், நாகராஜ், செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படைத் தாக்குதலால் கடலில் மூழ்கி உயிரிழந்ததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில், நேற்று மாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகில் மீனவப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.