ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், விசைப் படகுகளை நாட்டுடமையாக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்திற்கு எதிராகவும் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மீனவச் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 29ஆம் தேதி இராமேஸ்வரம் டோக்கன் வழங்கும் அலுவலகத்திலிருந்து, இரயில் மறியல் செய்ய பேரணியாக இரயில் நிலையத்தை நோக்கி 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய அரசு அதிகாரிகள், காவலர்கள் மீனவப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்நாடு அரசும், அரசு அதிகாரிகளும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க நேரம் வாங்கித் தருவதாக கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள்! இந்நிலையில், மீனவச் சங்கங்கள் கூட்டத்தின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதனையடுத்து, இன்று வழக்கம் போல் இராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்திலிருந்து டோக்கன்கள் பெற்று 529 படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.