தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரம்பு மீறி மீனவர்கள் மீது தாக்குதல்; இலங்கை கடற்படை அட்டூழியம்! - இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மீனவர்கள் இருவர் காயமடைந்தனர்.

rameswaram fishermen attacked by srilankan navy
rameswaram fishermen attacked by srilankan navy

By

Published : Nov 19, 2020, 2:28 PM IST

ராமநாதபுரம்:மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, நேற்று (நவ. 18) 500க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன்வளத் துறையிடம் அனுமதி சீட்டு பெற்று, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்தும், கற்களை கொண்டு தாக்கியும் மீனவர்களை விரட்டி அடித்தனர்.

இதனால் மீனவர்கள் பயந்து பாதியிலேயே கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் கல் எறிந்ததில் ஜான்‌ என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற மலைச்சாமி, கருப்பையா ஆகிய இருவருக்கும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. காலையில் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details